/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம்
மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம்
மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 06, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில், ஏ.ஐ.சி.சி.டி.யு., மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மாநில மின்வாரியங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உ.பி., சண்டிகார் மின் வாரிய தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், கூட்டுக்குழு தலைவர் விஜயகுமார், வட்ட செயலாளர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர்.