/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
13ல் கரூரில் மின் குறைதீர் கூட்டம்
/
13ல் கரூரில் மின் குறைதீர் கூட்டம்
ADDED : நவ 09, 2025 03:51 AM
கரூர்: கரூரில் வரும், 13ல், மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலு-வலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கரூர் மின் பகிர்மான வட்டம் சார்ந்த பகுதியில், மாதாந்திர மின் குறைதீர் கூட்டம், மூன்று இடங்களில் நடக்கிறது.
அதன்படி வரும், 13ம் தேதி காலை, 11:00 மணிக்கு கரூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் குறைதீர் கூட்டம் நடக்கி-றது.
வரும், 20 காலை, 11:00 மணிக்கு குளித்தலை செயற்பொறி-யாளர் அலுவலகத்திலும், 27 காலை, 11:00 மணிக்கு கரூர் கிரா-மியம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் குறைதீர் கூட்டம் நடக்கிறது. அதில், பொது மக்கள் பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

