4 தொகுதி ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரம் ஒதுக்கீடு
4 தொகுதி ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரம் ஒதுக்கீடு
ADDED : ஏப் 16, 2026 06:07 AM
கரூர் : கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில், போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தொகுதி வாரியாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதல் சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை மற்றும் துணை சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சம்மந்தப்பட்ட தொகுதிகளில் அமைந்துள்ள, பாதுகாப்பு அறைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நான்கு சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலகங்களில், அந்தந்த தேர்தல் அலுவலர் தலைமையில், போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இரண்டாம் சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை மூலம் ஓட்டுச்சாவடி மையத்திற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்படி அரவக்குறிச்சி, 267 ஓட்டுச்சாவடி, கரூர், 283 ஓட்டுச்சாவடி, கிருஷ்ணராயபுரம் தொகுதியில், 275 ஓட்டுச்சாவடி, குளித்தலை, 286 ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
செய்யப்பட்டது.
தேர்தல் பொது பார்வையாளர்கள் ராஜீவ் குமார் ஸ்ரீவஸ்தவ் (கரூர்), ரம்யா (அரவக்குறிச்சி), ராஜீவ் பிரசார் (கிருஷ்ணராயபுரம்), மனோஜ் குமார் (குளித்தலை) உள்பட பலர் பங்கேற்றனர்.
