ADDED : நவ 30, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், நவ. 30-
திம்பத்தை அடுத்த ஆசனுார் வனப்பகுதியில், யானைகள் நடமாட்டம் சாதாரணமாக உள்ளது. மைசூரு சாலையை கடந்து செல்வதும் வழக்கம். ஆசனுார் அருகே மைசூரு சாலையில் செம்மண்திட்டு என்ற இடத்தில், ஒற்றை யானை நேற்று காலை சாலையோரம் இலை தழைகளை சாப்பிட்டு கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியே சென்ற காரை திடீரென துரத்தி சென்றுள்ளது. சுதாரித்த டிரைவர் வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார். பிறகு சாலையில் சிறிது நேரம் நடமாடிய யானை, தானாகவே வனப்பகுதிக்குள் சென்றது.