/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு எல்கை பந்தய போட்டி
/
குளித்தலையில் மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு எல்கை பந்தய போட்டி
குளித்தலையில் மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு எல்கை பந்தய போட்டி
குளித்தலையில் மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு எல்கை பந்தய போட்டி
ADDED : மே 05, 2025 02:07 AM
குளித்தலை: குளித்தலை, மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு குளித்தலை நண்பர்கள், காளை, குதிரை வளர்ப்போர் சங்கம் சார்பில், முதலாம் ஆண்டு எல்கை பந்தய போட்டி நேற்று காலை நடைபெற்றது.
இதில் சிறிய மாடு, ஒத்தை மாடு, இரட்டை மாடு, புதிய குதிரை, பெரிய குதிரை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்-டிகள் நடைபெற்றன. குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் போட்-டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குளித்தலை தி.மு.க.,
ஒன்றிய செயலாளர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட பஞ்.,குழு துணைத் தலைவர் தேன்மொழி, மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்-றனர்.
இந்த எல்கை பந்தய போட்டியில் மாடுகள், குதிரைகள் எல்-லைக்கோட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன. சிறிய மாடுகளுக்கு மூன்று மைல், பெரிய மாடுகளுக்கு ஆறு மைல், இரட்டை மாடு-களுக்கு எட்டு மைல் தொலைவும், சிறிய குதிரைகளுக்கு எட்டு மைல், பெரிய குதிரைகளுக்கு, 10 மைல் தொலைவும் நிர்ணயிக்-கப்பட்டது.
திருச்சி, கரூர், தஞ்சாவூர், கோவை, திருவாரூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மாடுகள், குதி-ரைகள் கலந்து கொண்டன.
வெற்றி பெற்ற குதிரை, மாடு உரிமையாளர்களுக்கு பரிசு தொகை, கோப்பை வழங்கப்பட்டது.

