/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு சங்கம் மூலம் பணியாளர் குறைதீர் முகாம்
/
கூட்டுறவு சங்கம் மூலம் பணியாளர் குறைதீர் முகாம்
ADDED : ஜூலை 12, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் :கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில், பணியாளர் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.
அதில், கரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், குறைகளை மனுக்களாக தயார் செய்து, பொது விநியோக திட்ட அலுவலர் அருண் மொழியிடம் வழங்கினர். அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவல கண்காணிப்பாளர் ஆசை தம்பி, துணை பதிவாளர் அலுவலக கண் காணிப்பாளர் லீலாவதி உள்பட பலர் உடனிருந்தனர்.