/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேர்தல் நடத்தை விதி அமல் எம்.எல்.ஏ., அலுவலகம் 'சீல்'
/
தேர்தல் நடத்தை விதி அமல் எம்.எல்.ஏ., அலுவலகம் 'சீல்'
தேர்தல் நடத்தை விதி அமல் எம்.எல்.ஏ., அலுவலகம் 'சீல்'
தேர்தல் நடத்தை விதி அமல் எம்.எல்.ஏ., அலுவலகம் 'சீல்'
ADDED : மார் 18, 2024 03:34 AM
கரூர்: தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தால், கரூர்
எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19 ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் உள்ள கட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன.
பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகள் அகற்றப்படுகின்றன. கரூர், கோட்டை மேடு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள கரூர்
எம்.எல்.ஏ. அலுவலகத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கரூர் மேயர், துணை மேயர் அறைகள் பூட்டப்பட்டன. அவர்கள், பயன்படுத்திய வாகனங்களும் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. கரூர் நகரத்தில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை அகற்றவும், கட்சி சுவர் விளம்பரங்களை சுண்ணாம்பு கொண்டு அழிக்கவும் கட்சியினருக்கு தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தினர்
அதன்படி பல்வேறு கட்சியினர் தங்களது விளம்பர பாதகைகளை அகற்றியும், சுவர் விளம்பரங்களை அழித்தும் வருகின்றனர். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

