ADDED : ஆக 03, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, தனியார் பொறியியல் கல்லுாரி மாணவனை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஆதி நாராயணன் மகன் சூர்யா நாராயணன், 20. கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி இ.சி.இ., மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 31ல் கல்லுாரியில் இருந்து வெளியே சென்ற சூர்யா நாராயணனை காணவில்லை. இதுகுறித்து, தந்தை ஆதி நாராயணன், 50; கொடுத்த புகாரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.