சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்:துறை சார்பில் விழிப்புணர்வு
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்:துறை சார்பில் விழிப்புணர்வு
ADDED : மார் 03, 2024 01:23 AM
அ நிறம் | அளவு
கரூர்;மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, லா தொண்டு நிறுவன செயலாளர் வெங்கடேசன் தலைமையில், கரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை நடந்தது. அதில், நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற பாரம்பரிய கிராமிய ஒயிலாட்டம், கரகம், பறையாட்டம், நாடகம் ஆகியவற்றின் மூலம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிறகு, கரூர் பஸ் ஸ்டாண்டில் பொய்க்கால் குதிரை வேடமிட்ட கலைஞர்கள், பொதுமக்களுக்கு துணி பைகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
