/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
25, 26ல் இ.பி.எஸ்., வருகை;அ.தி.மு.க.,-பா.ஜ., ஆலோசனை
/
25, 26ல் இ.பி.எஸ்., வருகை;அ.தி.மு.க.,-பா.ஜ., ஆலோசனை
25, 26ல் இ.பி.எஸ்., வருகை;அ.தி.மு.க.,-பா.ஜ., ஆலோசனை
25, 26ல் இ.பி.எஸ்., வருகை;அ.தி.மு.க.,-பா.ஜ., ஆலோசனை
ADDED : செப் 22, 2025 01:47 AM
கரூர்:கரூரில் உள்ள, பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில், இ.பி.எஸ்., பிரசாரம் பயணம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். வரும், 25, 26ல், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
இதற்கான, பல்வேறு பணிகள் குறித்து, மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் விளக்கமளித்து பேசினார். கூட்டத்தில், அ.தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, பொருளாளர் கண்ணதாசன், மாவட்ட துணை செயலர் ஆலம் தங்கராஜ், மேற்கு ஒன்றிய செயலர் கமலகண்ணன், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சக்திவேல் முருகன், பொதுச்செயலர்கள் செல்வராஜ், உமாதேவி, சாமிதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.