/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் இ.பி.எஸ்.,
/
சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் இ.பி.எஸ்.,
ADDED : ஜன 29, 2024 12:37 PM
கரூர்: ''கடந்த சட்டசபை தேர்தலில், இ.பி.எஸ்., எடுத்து முடிவால் தான், அ.தி.மு.க., தோற்றது,'' என, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., தெரிவித்தார்.
கரூர் தனியார் திருமண மண்டபத்தில், எம்.பி., தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், உரிமை மீட்பு குழு சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில், நேற்று மாலை நடந்தது. அதில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., கலந்துகொண்டார்.
இதில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., பொது செயலாளர் பதவி, தொண்டர்கள் மூலம் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என, எம்.ஜி.ஆர்., சட்ட விதி கொண்டு வந்தார். அதனடிப்படையில் ஜெயலலிதாவும், 30 ஆண்டு காலம் செயல்பட்டார். அந்த விதியை மாற்றி,
இ.பி.எஸ்., தன்னைத்தானே பொது செயலாளராக அறிவித்து கொண்டார். விரைவில் தமிழக மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவர். அப்போது அ.தி.மு.க., தொண்டர்கள்,
இ.பி.எஸ்.,சை துாக்கி எறிவார்கள்.
கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், மத்திய அமைச்சர் அமித்ஷா, என்னையும், இ.பி.எஸ்.,சையும் அழைத்து பேசினார். அப்போது தினகரன் கட்சிக்கு, 20 முதல், 10 சீட்டுகள் தர வேண்டும். சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். அதை அவர் ஏற்கவில்லை. இதனால் கடந்த சட்டசபை தேர்தலில், இ.பி.எஸ்., எடுத்த முடிவால் தான், அ.தி.மு.க., தோல்வியை சந்தித்தது. தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அ.தி.மு.க.,வில் எம்.ஜிஆர்., தொண்டர்களுக்கு அளித்த, உரிமைகளை மீட்கத்தான், தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ.,க்கள் மனோஜ் பாண்டியன், அய்யப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.