ADDED : ஜன 16, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள ஊராட்சிகளில், பொங்கல் பண்டிகையையொட்டி சமத்துவ பொங்கல் நடந்தது.
தை திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி சேந்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் பேரூராட்சி அலுவலகம், பெரியகுளம் ஊராட்சி, பச்சுடையாம்பட்டி ஊராட்சி உட்பட்ட அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. சேந்தமங்கலம் பேரூராட்சி தலைவர் சித்ரா தனபாலன், துணைத் தலைவர் ரகு, செயல் அலுவலர் வனிதா மற்றும் வார்டு கவுன்சி-லர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் பெரியகுளம் ஊராட்சி மற்றும் பச்சுடையாம்பட்டி ஊராட்சி அலுவலகத்திலும் சமத்துவ பொங்கல் விழா கொண்-டாப்பட்டது.
