நெல் கொள்முதல்
நிலையம் திறப்பு
சென்னிமலை: சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி, பெருமாள் மலையில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நேற்று நடந்தது. சேர்மேன் காயத்ரி இளங்கோ தலைமையில், துணை பெருந்தலைவர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். குமாரவலசு ஊராட்சி தலைவர் இளங்கோ, வாகை தொழுவு அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தற்கொலை செய்த பெண்அடையாளம் தெரிந்தது
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே ஒண்டி முனியப்பன் கோவில் அருகில், அரக்கன் கோட்டை வாய்க்கால் கரையோரத்தில் ஒரு மரத்தில் துாக்கில் தொங்கிய, அடையாளம் தெரியாத பெண் சடலத்தை, பங்களாப்புதுார் போலீசார் மீட்டு நேற்று முன்தினம் மீட்டனர்.
இதுகுறித்து விசாரித்ததில், கோபி, கலிங்கியம், செல்லிபாளையத்தை சேர்ந்த முருகன் மனைவி சென்னியம்மாள், 45, என்பது தெரிந்தது. சில காலமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று ஒண்டி முனியப்பன் கோவிலுக்கு சென்றவர், மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று, போலீசார் தெரிவித்தனர்.

