ADDED : ஜூன் 29, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்-ஈரோடு சாலையில் இருபுறமும் குப்பை கொட்டுவதால், அப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது.
கரூர்
மாவட்டம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் சின்ன ஆண்டாங்கோவில்
கீழ்பாகம் கிராம பஞ்., பகுதியையொட்டி ஈரோடு சாலை உள்ளது. கிராம பஞ்.,
ஆக இருந்தாலும், கரூர் நகரை ஒட்டியுள்ளதால், சின்ன ஆண்டாங்கோவில்
பஞ்., நகரமாக காட்சியளிக்கும். சில நாட்களாக ஈரோடு சாலையில், காவலர்
குடியிருப்பு எதிர்புறம், ரெட்டிப்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதிகளில்
கொட்டப்பட்ட குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. பலமான
காற்று வீசும்போது,
குப்பைகள் ரோட்டில் சிதறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே,
ஈரோடு சாலையில் உள்ள குப்பை களை அகற்ற, ஆண்டாங்கோவில் கிழக்கு கிராம
பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
