ADDED : மே 28, 2026 05:35 AM

கரூர்:கரூர்--ஈரோடு சாலையின் இருபுறமும் குப்பை கொட்டப்படுவதால், அந்த பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது.
தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன், சின்ன ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து பகுதியையொட்டி ஈரோடு சாலை உள்ளது. கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும், கரூர் நகரை ஓட்டியுள்ளதால், சின்ன ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து, நகரமாக காட்சியளிக்கும்.
கடந்த, சில நாட்களாக ஈரோடு சாலையில், மருத்துவ நகர் பகுதியில் கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. பலமான காற்று வீசும் போது, குப்பை சிதறுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். குப்பையை உடனடியாக அகற்றினால், தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
தற்போது, கரூர் நகரப்பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில், ஈரோடு சாலையில் உள்ள குப்பையை அகற்ற, ஆண்டாங்கோவில் மேற்கு கிராம பஞ்சாயத்து நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம்.
