/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும்: காகித ஆலை கோரிக்கை

ADDED : செப் 14, 2024 07:06 AM
கரூர்: ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும் என, கரூர் காகித ஆலை (டி.என்.பி.எல்.,) நிர்வாகம் சார்பில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு, கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: ஈரோட்டில் இருந்து, திருச்சிக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் (எண்-06612) கரூர் அருகே புகழூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மாலை, 5:39 மணிக்கு வந்து விட்டு, 5:40 மணிக்கு புறப்பட்டு செல்லும். கடந்த, 2023 அக்., 1 முதல் ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் மாலை, 5:29 மணிக்கு வந்து விட்டு, 5:30 மணிக்கு செல்கிறது. இதனால், காகித ஆலையில் மாலை, 5:30 மணிக்கு ஷிப்ட் முடிந்த பிறகு தொழிலாளர்கள், தொழில் பழகுனர்கள், ஆசிரியர்கள், ஐ.டி.ஐ., மாணவர்கள், கரூர், மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை, பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், திருச்சி ஆகிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலை முன்பு இருந்தது போல மாலை, 5:39 மணிக்கு, புகழூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விட்டு, 5:40 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையில், நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.