/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி
ADDED : ஜூலை 01, 2025 12:59 AM
கரூர்,  வரும், 4ல்  பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்கிறது.
கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்,-  தமிழ்நாடு நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும், 4ல் நடக்கிறது. ஆட்சிமொழி  வரலாற்றில்  கீ.இராமலிங்கம், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையின் தமிழ் ஆட்சிச்சொல் பணி ஆகிய தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர், அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம்,  தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளில் நடக்கிறது.
இப்போட்டியில்  முதன்மை கல்வி அலுவலரால்  தெரிவு செய்யப்பட்ட  மாணவர்கள்  மட்டுமே  கலந்து கொள்ள இயலும். முதல் பரிசு பெறும் மாணவர்கள், சென்னையில் மாநில  அளவில் நடத்தப்படும் போட்டிகளில்    கலந்து கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

