/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி கட்டுரை போட்டி: பங்கேற்க அழைப்பு
/
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி கட்டுரை போட்டி: பங்கேற்க அழைப்பு
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி கட்டுரை போட்டி: பங்கேற்க அழைப்பு
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி கட்டுரை போட்டி: பங்கேற்க அழைப்பு
ADDED : ஆக 11, 2025 05:51 AM
கரூர்: கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் வெளியிட்ட அறிக்கை:
கரூர், வீரராக்கியம் சுவாதி மஹால், பா.ஜ., கிருஷ்ணராயபுரம் தொகுதி சார்பில், பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு செப்., 21ல் முப்-பெரும் விழா நடக்கிறது. இதையொட்டி கட்டுரை போட்டி நடக்கிறது. இதில், உலக தலைவர் மோடி, நான் வியந்த தலைவர் மோடி, மகாகவி பாரதியும் தேசிய சிந்தனைகளும், சுதந்திர காற்றை சுவாசிக்க புரட்சி செய்த மகாகவி பார-தியும், வல்லரசு இந்தியாவிவை செதுக்கும் மோடியும், சுதந்திர இந்தியாவிற்கான சமத்துவ தலைவர் இம்மானுவேல் சேகரன், தென்தமிழ-கத்தின் புரட்சி நாயகர் இம்மானுவேல் சேகரன் ஆகிய தலைப்புகளில் நடக்கிறது.
போட்டியில் கலந்துகொள்பவர்கள், கிருஷ்ணரா-யபுரம் தொகுதிக்குள் வசிக்க வேண்டும். கட்டு-ரைகள், 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கட்டுரைகளை ஆக., 16 முதல் செப்., 1க்குள், help.kaveriamr@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு கட்டுரை அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டியில், 14 வயதுக்குட்பட்ட போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு, முதல் பரிசு, 10 கிராம் வெள்ளி நாணயம், இரண்டாம் பரிசு, 5 கிராம் வெள்ளி நாணயம், ஆறுதல் பரிசு, 2 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். வயது, 15 முதல், 21 வரை முதல்பரிசு, 20 கிராம் வெள்ளி நாணயம், இரண்டாம் பரிசு, 10 கிராம் வெள்ளி நாணயம், ஆறுதல் பரிசு 2 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.