/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முன்னாள் அமைச்சர் தம்பிக்கு இரண்டு நாள் போலீஸ் காவல்
/
முன்னாள் அமைச்சர் தம்பிக்கு இரண்டு நாள் போலீஸ் காவல்
முன்னாள் அமைச்சர் தம்பிக்கு இரண்டு நாள் போலீஸ் காவல்
முன்னாள் அமைச்சர் தம்பிக்கு இரண்டு நாள் போலீஸ் காவல்
ADDED : செப் 19, 2024 07:26 AM
கரூர்: கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தம்பி சேகருக்கு, கொலை மிரட்டல் வழக்கில் இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தை சேர்ந்-த பிரகாஷ், 50, தொழில் அதிபர். இவரது மகள் பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலம் உள்ளது.
அதை யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், புஞ்சை தோட்டக்கு-றிச்சி பேரூர் அ.தி.மு.க., துணை செயலர் செல்வராஜ், தமிழ்நாடு மற்றும்
புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் ஆகியோர் போலியான ஆவணங்கள் தயாரித்து, கிரையம் செய்து
கொண்டதாக, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கடந்த ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார்
செய்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்-றனர்.
மேலும் தொழிலதிபர் பிரகாஷும், அதே நிலம் அபகரிப்பு புகாரில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர்
மற்றும் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக, வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த ஜூன், 22ல் அளித்த புகார்-படி வழக்கு
பதிவு செய்தனர்.
நில அபகரிப்பு வழக்கில் ஜூலை, 17ல், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர், பிரவீன், வில்லிவாக்கம் முன்னாள் போலீஸ்
இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கொலை மிரட்டல் வழக்கிலும்
விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். தற்போது மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த, 2ல் நிலம் அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் விஜ-யபாஸ்கர் தம்பி சேகர், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., அ.தி.மு.க.,
துணை செயலர் செல்வராஜ் ஆகியோரை கைது செய்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில்,
கரூர் ஜே.எம். 1 நீதிமன்ற நீதிமன்-றத்தில், சேகரை நேற்று ஆஜர்படுத்தி, கொலை மிரட்டல் வழக்கில் போலீஸ் காவல் கோரி, வாங்கல்
போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை நீதிபதி பரத்குமார் விசாரித்து, இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தர-விட்டார்.
பின், அவரை போலீசார் அழைத்து சென்றனர்.