ADDED : பிப் 07, 2026 09:16 AM
அ நிறம் | அளவு
கரூர்: புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய மாணவர் படை(என்.சி.சி.,) 'ஏ' சான்றிதழுக்கான தேர்வு நடந்தது. தலைமை ஆசிரியர் விஜயன் தலைமை வகித்தார்.
திருச்சி 3 பட்டாலியன் அதிகாரி வினோத் மற்றும் சங்கீத் நிர்மல் மேற்பார்வையில் தேர்வு நடந்தது. இத்தேர்வில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 50 பேர் மற்றும் டி.என்.பி.எல்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 50 பேர் தேர்வு எழுதினர். என்.சி.சி., அலுவலர் பொன்னுசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
