/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கூட்டுறவு துறை அலுவலகத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட எதிர்பார்ப்பு
/
கூட்டுறவு துறை அலுவலகத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட எதிர்பார்ப்பு
கூட்டுறவு துறை அலுவலகத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட எதிர்பார்ப்பு
கூட்டுறவு துறை அலுவலகத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 24, 2025 01:02 AM
கரூர், கரூர் அருகே செயல்படும், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் உள்பட, மூன்று அலுவலகங்கள் செயல்படும் இடத்தை சுற்றி, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என, ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
கரூர், வெள்ளியணை சாலையில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நீதிமன்றம், எஸ்.பி., அலுவலகம், வங்கி, மாவட்ட பஞ்., அலுவலகம், சுகாதாரத்துறை, கல்வித் துறை அலுவலகம் உள்பட, பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கூட்டுறவு துறை சார்பில், இணைப்பதிவாளர் அலுவலகம், துணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் பொது வினியோக திட்ட அலுவலகம், ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. அதில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல தார்ச்சாலை இல்லை. மூன்று அலுவலகங்களை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. அலுவலகத்தின் சுற்றுப்புற பகுதிகளில் காடுகள் உள்ளதால், மாலை நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தாராளமாக உலா வருகின்றன. இதனால், மூன்று அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இரவு நேரத்தில் பணிகள் முடிந்த பிறகு, பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர். எனவே, கரூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, கூட்டுறவு துறை சார்ந்த அலுவலகங்களை சுற்றி, சுற்றுச்சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.