/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழாய் பராமரிப்பு பகுதியில் சாலை அமைக்க எதிர்பார்ப்பு
/
குழாய் பராமரிப்பு பகுதியில் சாலை அமைக்க எதிர்பார்ப்பு
குழாய் பராமரிப்பு பகுதியில் சாலை அமைக்க எதிர்பார்ப்பு
குழாய் பராமரிப்பு பகுதியில் சாலை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 07, 2025 01:19 AM
கரூர் :கரூரில், குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நடந்த இடத்தில், தார்ச்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர் மாநகராட்சி பகுதிகளில் உடைந்த குடிநீர் குழாய்கள் பராமரிப்பு, புதிய குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடக்கிறது. சமீபத்தில், கரூர் அருகே திருமாநிலையூர் - செல்லாண்டிப்பாளையம் சாலையில், குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை.
இதனால், அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இரவு நேரத்தில், டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். எனவே, குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், திருமாநிலையூர்-செல்லாண்டிப்பாளையம் பகுதியில், உடனடியாக தார் சாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.