ஓட்டு எண்ணும் மையத்தில் கட்டுப்பாடு குறித்து விளக்கம்
ஓட்டு எண்ணும் மையத்தில் கட்டுப்பாடு குறித்து விளக்கம்
ADDED : மே 04, 2026 05:59 AM
கரூர்:கரூர்,
தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், இன்று காலை,
8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணும் மையத்தில்
கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:
ஓட்டு
எண்ணும் மையத்துக்குள் கலெக்டர், டி.ஆர்.ஓ., தேர்தல் அலுவலர், உதவி
தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும்
பணியாளர், வேட்பாளர், அவர்களது முகவர், செய்தியாளர் மட்டுமே
அனுமதிக்கப்படுவர். தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும்
அலுவலர் மூலம் பெறப்பட்ட அனுமதி அட்டை வைத்திருக்க வேண்டும். ஓட்டு
எண்ணும் இடத்துக்கு முகவர்கள், மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட
எலக்ட்ரானிக் உபகரணங்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு
செல்ல அனுமதி இல்லை. பாதுகாப்பு நடைமுறைகள் அனைவருக்கும்
கடைப்பிடிக்கப்படும்.
ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மேஜையிலும் அதற்காக
நியமிக்கப்பட்ட முகவர் மட்டுமே அமர முடியும். அவர்களை உதவி தேர்தல்
நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்வதுடன், கண்காணிப்பார்.
அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் குடிநீர், சிற்றுண்டி, அடிப்படை வசதி
செய்யப்பட்டுள்ளது. மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
