/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனைத்து தொழிற்சங்கம் சார்பில் விளக்க கூட்டம்
/
அனைத்து தொழிற்சங்கம் சார்பில் விளக்க கூட்டம்
ADDED : ஜூலை 06, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பில், மாவட்ட தொ.மு.ச., பேரவை செயலர் அண்ணா வேலு தலைமையில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று விளக்க கூட்டம் நடந்தது.
அதில் வரும், 9ல், நாடு முழுவதும் நடைபெறவுள்ள, மறியல் போராட்டத்தின் அவசியம் குறித்தும், நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.விளக்க கூட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள் பால்ராஜ், சுடர் வளவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

