/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராமத்தில் போலி டாக்டர்கள்: நடவடிக்கை எடுக்க வலியு-றுத்தல்
/
கிராமத்தில் போலி டாக்டர்கள்: நடவடிக்கை எடுக்க வலியு-றுத்தல்
கிராமத்தில் போலி டாக்டர்கள்: நடவடிக்கை எடுக்க வலியு-றுத்தல்
கிராமத்தில் போலி டாக்டர்கள்: நடவடிக்கை எடுக்க வலியு-றுத்தல்
ADDED : ஜூன் 23, 2025 05:39 AM
கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி கிராமப்புறங்-களில், போலி கால்நடை டாக்டர்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கால்நடைகள் நோய்-வாய்ப்படும்போது, அவசர தேவைக்கு இரவு, பகல் நேரங்களில் மருத்துவரை தேடி நான்கு சக்கர வாகனங்களுக்கு வாடகை கொடுத்து அழைத்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஒரு சிலர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அவசர தேவைக்கு நாட வேண்டியுள்ளது. இதை பயன்படுத்தி போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தங்கு தடையின்றி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து உலா வருவதை கண்டறிந்து தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.