/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரதம் தொடக்கம்
/
குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரதம் தொடக்கம்
குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரதம் தொடக்கம்
குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு ரதம் தொடக்கம்
ADDED : டிச 11, 2024 01:46 AM
குடும்பநல கருத்தடை சிகிச்சை
விழிப்புணர்வு ரதம் தொடக்கம்
கரூர், டிச. 11-
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை (வாசக்டமி) இருவார விழா குறித்த விழிப்புணர்வு ரதத்தை, கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின், அவர் கூறியதாவது: நவீன கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக, 1,100 ரூபாய், ஊக்குவிப்பாளர்களுக்கு, 200 ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் மூலம் பங்களிப்பு, 3,900 ரூபாய் என பயனாளிகளுக்கு மொத்தம், 5,000 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் லோகநாயகி, இணை இயக்குனர் மருத்துவப்பணிகள் செழியன், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் சாந்தி, மாநகராட்சி நகர்நல அலுவலர் கவுரி சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.