/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் இன்று ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம்
/
குளித்தலையில் இன்று ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம்
குளித்தலையில் இன்று ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம்
குளித்தலையில் இன்று ஆண்களுக்கான குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம்
ADDED : பிப் 23, 2024 02:43 AM
கரூர்;'இன்று ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடக்கிறது என, குடும்ப நல துணை இயக்குனர் சுபிலா தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் இன்று குளித்தலை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடக்கிறது. நவீன ஆண் கருத்தடை சிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக, 1,100 ரூபாய், ஊக்குவிப்பாளர்களுக்கு, 200 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் பங்களிப்பு, 3,900 ரூபாய் என பயனாளிகளுக்கு மொத்தம், 5,000 ரூபாய் வழங்கப்படும். 1,100 ரூபாய் மட்டும் பெறும் பயனாளிகளுக்கு ஒரு நலத்திட்ட உதவி வழங்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.