தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி


ADDED : மார் 03, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அருகே பழைய மணல் ரீச் அருகே திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பழையூர் மேடு கீழத்தெருவை சேர்ந்தவர் ராசு, 60, விவசாய தொழிலாளி. இவர் கடந்த, 24 காலை 9:00 மணி அளவில் தனக்கு சொந்தமான ஆடுகளுக்கு, இலைகளை வழங்குவதற்காக மரத்தின் மீது ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது தவறி கீழே விழுந்ததில், தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இது குறித்து அவரது மகன் சிவச்சந்திரன், 35, கொடுத்த புகார்-படி, குளித்தலை போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us