/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மிளகாய் அறுவடையில் விவசாயிகள் தீவிரம்
/
மிளகாய் அறுவடையில் விவசாயிகள் தீவிரம்
ADDED : மார் 31, 2025 02:24 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வீரிய-பாளையம், லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்-தரப்பட்டி, கணக்கம்பட்டி, எழுதியாம்பட்டி, செக்கணம், சேங்கல், மலையாண்டிப்பட்டி, தேசியமங்களம், கழுகூர், கொசூர், மத்தகிரி, குளத்துார் ஆகிய பகுதியில், விவசாயிகள் பர-வலாக மிளகாய் சாகுபடி செய்துள்ளனர்.
சாகுபடிக்கு தேவை-யான தண்ணீர், கிணற்று பாசனத்தை பயன்படுத்துகின்றனர். தற்-போது, மிளகாய் செடிகளில் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. விளைந்த மிளகாய்களை அறுவடை செய்து, வெயிலில் உலர்த்து-கின்றனர். பின், கரூர், திருச்சியில் செயல்படும் சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதில், மிளகாய் ஒருகிலோ, 150 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.