/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூக்கள் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
/
பூக்கள் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்
ADDED : ஜூன் 27, 2024 03:59 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், பூக்கள் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடு
பட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், காட்டூர், மாயனுார், செக்கணம், எழுதியாம்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில் சின்னரோஜா, விரிச்சிப்பூக்கள், செண்டுமல்லி, ஆகிய பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் செடிகளுக்கு பாய்ச்சப்
படுகிறது.
தற்போது செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. பூக்கள் பறிக்கப்பட்டு கரூர், திருச்சி, முசிறி, ஆகிய இடங்களில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று விரிச்சிப்பூக்கள் கிலோ, 90 ரூபாய், சின்னரோஜா, 100 ரூபாய், செண்டுமல்லி, 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
பூக்கள் சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைத்து
வருகிறது.