/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு உழும் பணியில் விவசாயிகள் மும்மரம்
/
மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு உழும் பணியில் விவசாயிகள் மும்மரம்
மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு உழும் பணியில் விவசாயிகள் மும்மரம்
மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு உழும் பணியில் விவசாயிகள் மும்மரம்
ADDED : ஆக 01, 2025 01:45 AM
கரூர், ஆக. 1
சம்பா சாகுபடி செய்ய ஏதுவாக, மண்ணை வளப்படுத்தும் நோக்கில் தக்கை பூண்டு பயிரிட நிலத்தை உழும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு வசதியாக ஜூன், 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தொடர்ந்து கர்நாடகாவில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர் வரத்து வந்து கொண்டே உள்ளது. தற்போது, சம்பா சாகுபடி தொடங்க தடையின்றி நீர் கிடைத்து வருகிறது. கரூர் மாவட்டத்தில், காவிரி ஆற்று பாசன பகுதிகளில், சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக, கிருஷ்ணராயபுரம், குளித்தலை வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், நெல் சாகுபடி செய்வதற்கு வசதியாக மண்வளம் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, இயற்கை உரம் தாவரமான தக்கை பூண்டு செடி வளர்ப்பு அதிகரித்துள்ளது.
இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மண்ணிலுள்ள தழைச்சத்தினை மக்காச்சோளம் அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதால், மண் வளம் பாதிக்கப்படுகிறது. அடுத்து பயிர் செய்யும் போது விவசாயம் பொலிவிழந்து வருவாய் கிடைப்பதில்லை. மக்காச்சோளம் அறுவடை செய்த பின், அந்நிலத்தில் கழிவுகளை அகற்றாமல் தக்கைபூண்டு செடி விதைகளை துாவவேண்டும். மூன்று வாரத்திற்குள் இச்செடி, 5 அடி வரை வளர்ந்து நிலத்தை காடு போல் மாற்றி விடுகிறது. இதை கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுக்கலாம்.
ஒரு மாதத்திற்கு பின் செடியை அப்படியே உழுது, மண்ணுக்கு அடிஉரமாக மாற்றி விடலாம். மேலும், நெல் சாகுபடி பயிருக்கு ரசாயன உரமான யூரியா தேவை அதிகமாக பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது.
இயற்கை உரமான தக்கை பூண்டு மூலம் நிலத்துக்கு தேவையான தழைச்சத்து கிடைக்கிறது. நெல் மகசூல் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ள்ளது. தற்போது, தக்கை பூண்டு சாகுபடியை மேற்கொள்ளும் வகையில், டிராக்டர் மூலம் நிலத்தை உழும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

