ADDED : ஜூலை 23, 2026 06:05 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
பஸ் ஸ்டாப் பகுதியில், அகில இந்திய கிசான் விவசாயிகள் சங்கம் சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார்.
அதில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வர்த்தக ஒப்பந்தம் மூலம்,
இயந்தியாவில் விவசாயிகளுக்கு பல்வேறு வகையில் பாதிப்புகள்
உருவாகும் நிலை உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவுடன் வர்த்தக
ஒப்பந்தம் மேற்கொள்ளும்போது, பொருளாதார பிரச்னைகள் ஏற்பட
வாய்ப்புள்ளது. பால் உற்பத்தி திறன் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால்
விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் உண்டாகும்.
எனவே, மத்திய அரசு புதிதாக கொண்டு வரப்படவுள்ள
வர்த்தக ஒப்பந்த சட்டத்தை திரும்பபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
என, கோஷம் எழுப்பினர். மாவட்ட பொதுக்குழு நிர்வாகி கந்தசாமி,
விவசாயிகள் சங்க பொருளாளர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் குமார்
உள்பட பலர் கலந்துகொண்டனர்.
