/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டா, சிட்டா வழங்குவதில் மத்திய, மாநில அரசு இணைந்து செயல்பட விவசாய சங்கம் வலியுறுத்தல்

ADDED : ஜன 21, 2025 06:52 AM
கரூர்: -பட்டா, சிட்டா வழங்குவதில் தமிழக அரசுடன், மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டும் என, காவிரி டெல்டா நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் ராஜாராம் தெரிவித்-துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:நாடு முழுவதும், கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சொத்து உரிமைகளை வழங்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக, 10 மாநி-லங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள, 50 ஆயிரம் கிராமங்களை சேர்ந்த, 65 லட்சம்
பேருக்கு ஸ்வாமித்வா மற்றும் பூ- ஆதார் சொத்துரிமை அட்டைகளை மத்திய அரசு வழங்கியுள்-ளது. தமிழகத்தை பொருத்தவரை, 75 சதவீதம் கிராம மக்கள் பட்டா, சிட்டா வைத்துள்ளனர். கூட்டு பட்டாவில் பங்குகள், இறந்தவர் பெயர் நீடிப்பது, கணினியால் ஏற்பட்ட தவறுகள், தாய் பத்திரம் இல்லாமை, பல தலைமுறை முன்
உள்ளவர் பெயர், உரிமையே இல்லாதவர் பெயர் என்று, 25 சதவீதம் மாற்றப்படாமலேயே உள்-ளது. இதில் தவறுகளை களைய, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் வழிமுறைகள் தெளிவாக இல்லா-ததால்,
பட்டாக்களில் தவறுகள் அதிகமாக உள்ளன. தமிழகத்தில் உள்ள பட்டாக்களுடன் இணைத்து பார்த்து, மத்திய அரசு வெளி-யிட்டால்தான் ஓரளவு சரியாக இருக்கும். இல்லாவிடில், தமிழக கிராம மக்களின் நில உரிமையில் சிக்கல்
மேலும் வலுக்கும். கிராம மக்களின் சொத்துரிமை விவகாரத்தில் மத்திய, மாநில அர-சுகள் இணைந்து செயல்பட்டால் ஓரளவு சிக்கல் குறையும். இவ்-வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.