/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாற்றங்கால் உழவு பணியில் விவசாயிகள்
/
நாற்றங்கால் உழவு பணியில் விவசாயிகள்
ADDED : ஆக 17, 2025 01:50 AM
கிருஷ்ணராயபுரம், மகிளிப்பட்டி கிராமத்தில், நிலங்களில் நெல் சாகுபடி செய்வதற்காக நாற்றங்கால் உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி கிராமத்தில், விவசாயிகள் விளை நிலங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். மாயனுார் காவிரி ஆற்றில், காவிரி நீர் வரத்து காரணமாக வாய்க்கால் மூலம், விவசாய பயன்பாட்டிற்கு இரட்டை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மாயனுார் முதல் மகிளிப்பட்டி, பிள்ளபாளையம் வழியாக திருச்சி வரை செல்கிறது. வாய்க்காலில் நீர் செல்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிணறுகளுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது. நெல் சாகுபடி துவங்குவதற்காக, விளை நிலங்களில் நாற்றங்கால் உழவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நாற்றங்கால் உழவு பணி முடிந்ததும், நிலத்தில் நெல் விதைகள் துாவப்படும்.