/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதர் மண்டிய நங்கம் காட்டுவாரி துார்வார விவசாயிகள் கோரிக்கை
/
புதர் மண்டிய நங்கம் காட்டுவாரி துார்வார விவசாயிகள் கோரிக்கை
புதர் மண்டிய நங்கம் காட்டுவாரி துார்வார விவசாயிகள் கோரிக்கை
புதர் மண்டிய நங்கம் காட்டுவாரி துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 22, 2025 02:22 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த இனுங்கூர் கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து, நங்கம் காட்டுவாரி தொடங்குகிறது. இந்த நங்கம் காட்டுவாரி வாய்க்கால், குளித்தலை அடுத்த குறிச்சி, நங்கவரம், நெய்தலுார் காலனி, பனையூர், சூரியனுார், களத்துவாரி உள்ளிட்ட பகுதிகளின் விவசாய நிலங்களுக்கு பாசன ஆதாரமாக உள்ளது. இந்த காட்டுவாரி, இனுங்கூரில் தொடங்கி, 16 கி.மீ., துாரம் பயணித்து, திருச்சி மாவட்டம், கொடியாலம் கிராமத்தில் உள்ள உய்யக்கொண்டான்
வாய்க்காலில் கலக்கிறது.
இந்த வாரியை துார்வாரி, ஓராண்டுக்கும் மேலாகிறது. இதனால், காட்டுவாரி முழுவதும் கோரைகளும், செடி, கொடிகளும் ஆக்கிரமித்துள்ளன. கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து அதிகளவு தண்ணீரை வெளியேற்றவும், தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திருப்பி விடும்போது, நங்கம் காட்டுவாரியிலும் அதிகளவு தண்ணீர் வரும். அவ்வாறு வரும் தண்ணீர், முறையாக செல்ல வழியில்லாததால், இரு கரைகளையும் ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால்
நெற்பயிர்கள் அழுகி விடுகின்றன. இதனால், 5,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படைந்து வருகிறது.
இதுகுறித்து, குளித்தலையில் ஆற்றுப்பாதுகாப்பு உட்கோட்டம், நீர்வளத்துறை செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலத்தில் விவசாய நிலம் பாதிப்பு ஏற்படும் முன், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, நங்கம் காட்டுவாரியை துார்வார உத்தரவிடவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

