/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஞ்சப்பட்டி ஏரியில் காவிரி உபரிநீரை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை
/
பஞ்சப்பட்டி ஏரியில் காவிரி உபரிநீரை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை
பஞ்சப்பட்டி ஏரியில் காவிரி உபரிநீரை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை
பஞ்சப்பட்டி ஏரியில் காவிரி உபரிநீரை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 07, 2024 01:16 AM
பஞ்சப்பட்டி ஏரியில் காவிரி உபரிநீரை
நிரப்ப விவசாயிகள் கோரிக்கை
கரூர், நவ. 7-
கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி
யில், வறட்சி பகுதி விவசாயிகள் அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விவசாயிகள் அமைப்பின் தலைவர் அழகப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கிருஷ்ணராயபுரத்தின் தென்பகுதி கிராமங்கள், கடவூர் உள்ளிட்ட அனைத்து கிராமங்களும் வானம் பார்த்த பூமியாக இருப்பதால் போதுமான தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது.
குடிநீர் ஆதாரம் இல்லாமலும், வேலைவாய்ப்புகள் இல்லாமலும் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருப்பதால், பஞ்சப்பட்டியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சப்பட்டி பெரிய ஏரிக்கும், சுற்றுலாத்தலமாக இருக்கும் பொன்னியாறு அணைக்கும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் ஆகியவற்றுக்கு காவிரி யின் உபரி நீரை பம்பிங் திட்டத்தில் கொண்டு வந்து நிரப்ப வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2025, ஜனவரி 21-ல் கரூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க நிர்வாகிகள் செல்வம், மணி, ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.