/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காரை ஒட்டு தடுப்பணை சுவரை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
/
காரை ஒட்டு தடுப்பணை சுவரை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
காரை ஒட்டு தடுப்பணை சுவரை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
காரை ஒட்டு தடுப்பணை சுவரை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 03, 2024 12:53 AM
காரை ஒட்டு தடுப்பணை சுவரை
உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
அரூர், நவ. 3-
அரூர் அடுத்த கொளகம்பட்டி காரை ஒட்டு தடுப்பணையின் சுவற்றை, உயர்த்தி கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொளகம்பட்டி பஞ்.,ல், கடந்த, 43 ஆண்டுகளுக்கு முன், கல்லாற்றின் குறுக்கே, காரை ஒட்டு தடுப்பணை கட்டப்பட்டது. மழைக்காலங்களில் ஆற்றில் வரும் வெள்ள நீர் மற்றும் வாணியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தென்கரைகோட்டை ஏரி வழியாக, காரை ஒட்டு தடுப்பணைக்கு வருகிறது. பின், அங்கிருந்து தொட்டம்பட்டி, நம்பிப்பட்டி மற்றும் அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், சுற்று வட்டார பகுதி விவசாய கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. இந்நிலையில், காரை ஒட்டு தடுப்பணை சுவரின் உயரம் மிகவும் தாழ்வாக உள்ளதால், அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலையுள்ளது. மேலும், மதகு அமைந்துள்ள பகுதி மேடு, பள்ளமாக உள்ளதால், கால்வாயில் அதிகளவு தண்ணீர் செல்வதில்லை. எனவே, தடுப்பணை சுவற்றை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.