/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
க.பரமத்தியில் ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
க.பரமத்தியில் ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
க.பரமத்தியில் ஆடு ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 27, 2025 01:41 AM
கரூர் ;க.பரமத்தியில், ஆடு ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில், மானாவாரி நிலங்கள் மூலம், விவசாய பணிகள் நடக்கின்றன. அமராவதி ஆறு, மழை மற்றும் கிணற்று நீரை நம்பிதான், விவசாயம் நடக்கிறது. அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத போது, மழைதான் மானாவாரி நிலங்களுக்கு கைகொடுக்கிறது.
இதனால் க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் ஆடு வளர்ப்பு தொழில் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக இந்த பகுதிகளில், 1.25 லட்சம் மேச்சேரி இன ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. பருவ நிலை மாற்றம் காரணமாக, ஆடுகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
இதுகுறித்து, ஆடு வளர்ப்பு விவசாயிகள் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியான மொஞ்சனுாரில் உள்ள, எல்.பி.பி., பாசன திட்டத்தை தென்னிலை வரை நீடித்தால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். பருவ நிலை மாற்றம் காரணமாக, நோய் தொற்று ஏற்பட்டு, ஆடுகள் அடிக்கடி இறக்கின்றன. இதனால், கால்நடை ஆம்புலன்ஸ் திட்ட த்தை விரிவுபடுத்த வேண்டும்.
இதனால், ஆடுகளுக்கு ஏற்படும் நோயை உடனடியாக கண்டறிந்து, சிகிச்சை அளிக்க முடியும். மேலும், ஆடுகள் ஆராய்ச்சி நிலையத்தை, க.பரமத்தியில் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.