/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள் தெலுங்கானாவிற்கு கண்டுணர்வு சுற்றுலா
/
அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள் தெலுங்கானாவிற்கு கண்டுணர்வு சுற்றுலா
அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள் தெலுங்கானாவிற்கு கண்டுணர்வு சுற்றுலா
அரவக்குறிச்சி வட்டார விவசாயிகள் தெலுங்கானாவிற்கு கண்டுணர்வு சுற்றுலா
ADDED : மே 19, 2025 01:46 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி வட்டாரத்தில், வேளாண்மை துறையின், 'அட்மா' திட்டம் சார்பில், விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில், 'அட்மா' திட்டத்தின் கீழ், அரவக்குறிச்சி தொகுதியை சேர்ந்த, 20 விவசா-யிகள், கண்டுணர்வு சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
'தாவர சுகாதார மேலாண்மை, பூச்சி மற்றும் நோய்கள் மேலாண்மை' என்ற தலைப்பின் கீழ், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள என்.ஐ.பி.எச்.எம்., - ஐ.ஐ.எம்.ஆர்., வலம்தரி, ஐதராபாத் நிறுவனம் மற்றும் ஆச்சார்யா ரங்கா வேளாண் பல்கலைக்க-ழகம் ஆகிய இடங்களுக்கு ஐந்து நாட்கள் அழைத்து செல்லப்பட்-டனர்.அங்கு, பயிர் மேலாண்மை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்க உரை வழங்கப்பட்டது. இதில், என்.ஐ.பி.எச்.எம்., ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் பவானி, பயிர்-களில் ஏற்படும் பூச்சி தாக்குதல் குறித்தும், அவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்தும் விளக்க
மளித்தனர்.
மேலும், உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை எவ்வாறு குறைப்பது, பூச்சிகளின் வகைப்பாடு, நன்மை செய்யும் பூச்சி, தீமை செய்யும் பூச்சி, மஞ்சள் வண்ண அட்டை, சோலார் விளக்கு பொறி, இனக்கவர்ச்சி பொறி இவைகளை கொண்டு எவ்வாறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது என்பது குறித்து விளக்கமளித்தனர்.
ஐ.ஐ.எம்.ஆர்., ஆராய்ச்சி நிலைய டாக்டர் ஹேமா சங்கரி, சிறுதா-னியத்தின் முக்கியத்துவம், சிறுதானிய பயிர்களில் பயிர் மேலாண்மை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, அவைகளில் இருந்து நமக்கு கிடைக்கும் துணை உற்பத்தி பொருட்கள், சிறுதா-னிய பயிர்களை மதிப்பு கூட்டி விற்பதற்கான விலை பொருள்க-ளையும் காண்பித்து விளக்கமளிக்கப்
பட்டது.
மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை விவசாயிகள் பார்வையிட்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சோனியா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபா-கரன் ஆகியோர், விவசாயிகளை ஒருங்கிணைத்து
அழைத்துச்சென்றனர்.