/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முருங்கை விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
/
முருங்கை விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 09, 2025 03:43 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தபடியாக முருங்கை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, கரும்பு முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை என, மூன்று வகையான முருங்கையை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.
அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்-பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி நடந்து வருகிறது. தற்போது, முருங்கை மரங்கள் பூ பூத்து காய்கள் காய்க்க துவங்கியுள்ளன. மார்ச் முதல் முருங்கை சீசன் தொடங்கி உள்ளது. கடந்த வாரம் மர முருங்கை ஒருகிலோ, 25 ரூபாய்க்கும், செடி
முருங்கை, 40 ரூபாய்க்
கும், கரும்பு முருங்கை,
42 ரூபாய்க்கும் விற்பனையானது.
தற்போது விலையில் மாற்றம் ஏற்பட்டு, மர முருங்கை, 35 ரூபாய், செடி முருங்கை, 50 ரூபாய், கரும்பு முருங்கை, 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முருங்கை விலை அதிகரித்துள்-ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.