/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளத்தில் மழைநீர் சேமிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
/
குளத்தில் மழைநீர் சேமிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜன 03, 2025 01:10 AM
கிருஷ்ணராயபுரம், ஜன. 3-
வயலுார் கிராமத்தில் உள்ள மழை நீர் சேமிப்பு குளத்தில், தண்ணீர் சேமிக்கப்படுவதால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பகுதியில், மழை நீர் சேமிப்பு குளம், 50 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. மழை நீர் குளத்திற்க்கு வரும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் மூலம், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு, மழை நீர் வரும் வகையில் வழித்தடங்கள் சீரமைப்பு செய்யப்பட்டது. அதன் மூலம், கடந்த மாதம் பெய்த மழை நீர் குளத்தில் சேமிக்கப்பட்டது. இதனால் வயலுார், சரவணபுரம், பாம்பன்பட்டி, நடுப்பட்டி, தேவசிங்கப்பட்டி, கோடங்கிப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, கணக்கம்பட்டி, அந்தரப்பட்டி கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததுடன், கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
இதை முன்னிட்டு, விவசாயிகள் நெல் சாகுபடி செய்து தற்போது வளர்ச்சி அடைந்து கதிர்கள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

