/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெற்றிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
/
வெற்றிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 18, 2024 07:02 AM
அரவக்குறிச்சி : நொய்யல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மரவாபாளையம், பூங்கோடை, சேமங்கி, முத்தனுார், கோம்புபாளையம், திருக்காடுதுறை, நத்தமேடு பாளையம், தவிட்டுப்பாளையம், புஞ்சை புகழூர், மோதுகாடு, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், கடம்பங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வெற்றிலையை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
வெற்றிலையை கூலி ஆட்கள் மூலம் பறித்து, 100 வெற்றிலை கொண்டதை ஒரு கவுளியாகவும், 104 கவுளி கொண்டதை ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். அதன் பிறகு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டுகளுக்கும் கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த வாரம் வெள்ளை கொடி வெற்றிலை இளம் பயிர் சுமை ஒன்று, 6,000 ரூபாய்க்கு ஏலம் போனது. தற்போது வரத்து குறைந்துள்ளதால், இளம் பயிர் வெற்றிலை சுமை ஒன்று, 8,000 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இதனால் இளம் பயிர் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

