/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 06, 2025 01:22 AM
கரூர், கரூர் மாவட்ட விவசாயிகள், விதையின் ஈரப்பதம் அறிந்து சேமிக்க வேண்டும் என, கரூர் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விதையின் ஈரப்பதம் அறிந்து விவசாயிகள் சேமிக்க வேண்டும். விதை அதிக முளைப்பு திறனுடன் இருக்கவும், உரிய காலம் வரை சேமிக்கவும் நெல், 13 சதவீதம், சோயாபீன்ஸ், சிறுதானியங்கள், பப்பாளி, 12 சதவீதம், பயறு வகைககள், நிலக்கடலை, சூரியகாந்தி, எள், கொத்தவரை, பீட்ருட், பாலக்கீரை, 9 சதவீதம், முருங்கை, புளிச்சை, வெங்காயம், கத்தரி, மிளகாய், தக்காளி, 9 சதவீதம், காலிபிளவர், முட்டைகோஸ், நுால்கோல், சுரை, பாகல், புடல், பீர்க்கன், பூசணி, பரங்கி, தர்ப்பூசணி, வெள்ளரி ஆகியவை, 7 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு சேமிக்க வேண்டும்.
எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை, விதை மாதிரி ஒன்றுக்கு, 80 ரூபாய் செலுத்தி கரூர் காந்தி கிராமம் தின்னப்பா நகரில் உள்ள, விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம். விதை பரிசோதனை வாய்ப்பை, கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, செய்திக்
குறிப்பில் கூறப்பட்டுள்ளது.