ADDED : பிப் 15, 2026 05:21 AM
கரூர்: கரூர் மாவட்ட விவசாயிகள், விதையின் முளைப்பு திறன் அறிந்து சேமிக்க வேண்டும் என, கரூர் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் ரமேஷ் குமார் தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:இந்திய குறைந்தபட்ச விதை அளவீடு பரிந்துரைத்த அளவில், விதையின் ஈரப்பதம் அறிந்து சேமிக்க வேண்டும். விதை அதிக முளைப்பு திறனுடன் இருக்கவும், உரிய காலம் வரை சேமிக்கவும் நெல், 80 சதவீதம், மக்காசோளத்துக்கு, 90 சதவீதம், கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, உளுந்து, துவரை, பாசிபயறு ஆகிய பயிர்களுக்கு, 75 சதவீதமும், நிலக்கடலைக்கு, 75 சதவீதமும், எள்ளுக்கு, 80 சதவீதமும் முளைப்பு திறன் நிர்-ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சோயாபீன்ஸ், சிறுதானியங்கள், பப்பாளி, சூரிய-காந்தி, எள், கொத்தவரை, பீட்ருட், கீரை வகைகள், வெங்காயம், கத்தரி, மிளகாய், தக்காளி, காலிபிளவர், முட்டைகோஸ், நுால்கோல், சுரை, பாகல், புடலை, பீர்க்கங்காய், பூசணி, பரங்கி, தர்ப்பூசணி, வெள்ளரி ஆகியவற்றுக்கு முளைப்பு திறன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதை-களை, விதை மாதிரி ஒன்றுக்கு, 80 ரூபாய் செலுத்தி கரூர் காந்தி கிராமம் தின்னப்பா நகரில் உள்ள, விதை பரிசோதனை நிலை-யத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை, கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
