ADDED : ஏப் 26, 2026 05:28 AM
கரூர்கரூர் மாவட்ட விவசாயிகள், விதையின் ஈரப்பதம் அறிந்து சேமிக்க வேண்டும் என, கரூர் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் ரமேஷ் குமார் தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்திய குறைந்தபட்ச விதை அளவீடு பரிந்துரைத்த அளவில், விதையின் ஈரப்பதம் அறிந்து சேமிக்க வேண்டும்.விதை அதிக முளைப்பு திறனுடன் இருக்கவும், உரிய காலம் வரை சேமிக்கவும் நெல், 80 சதவீதம், வீரிய மக்காச்சோளம், 90 சதவீதம், கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, குதிரை வாலி, உளுந்து, துவரை, பாசிபயறு ஆகிய பயிர்களுக்கு, 75 சதவீதம், நிலக்கடலை, 70 சதவீதம், காய்கறி பயிர்கள் கத்தரி, தக்காளி, வெங்காயம், கொத்தவரை, கீரை வகைகளுக்கு, 70 சதவீதமும் மிளகாய், பூசணி, பரங்கிகாய், புடல், பாகல், பீர்க்கன், தர்ப்பூசணி, 60 சதவீதமும் முளைப்பு திறன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை, விதை மாதிரி ஒன்றுக்கு, 80 ரூபாய் செலுத்தி கரூர் காந்தி கிராமம் தின்னப்பா நகரில் உள்ள, விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம். விதை பரிசோதனை வாய்ப்பை, கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
