ADDED : ஜூலை 15, 2026 05:51 AM

கரூர்:'விவசாயிகள், விதையின் ஈரப்பதம் அறிந்து சேமிக்க வேண்டும்' என, கரூர் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய குறைந்த பட்ச விதை அளவீடு பரிந்துரைத்த அளவில், விதையின் ஈரப்பதம் அறிந்து சேமிக்க வேண்டும். விதை அதிக முளைப்பு திறனுடன் இருக்கவும், உரிய காலம் வரை சேமிக்கவும் நெல், 13 சதவீதம், சோயாபீன்ஸ், சிறுதானியங்கள், பப்பாளி, 12 சதவீதம், பயறு வகைகள், நிலக்கடலை, சூரியகாந்தி, எள், கொத்தவரை, பீட்ருட், பாலக்கீரை, ஒன்பது சதவீதம், முருங்கை, வெங்காயம், கத்திரிக்காய், மிளகாய், தக்காளி எட்டு சதவீதம், காலிபிளவர், முட்டைகோஸ், நுால்கோல், சுரை, பாகல், புடல், பீர்க்கு, பூசணி, பரங்கி, தர்ப்பூசணி, வெள்ளரி ஆகியவை, ஏழு சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு சேமிக்க வேண்டும். எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை, விதை மாதிரி ஒன்றுக்கு, 80 ரூபாய் செலுத்தி கரூர் காந்தி கிராமம் தின்னப்பா நகரில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
