ADDED : ஆக 18, 2026 04:50 AM

கரூர்: கரூர் விதை பரிசோதனை நிலைய அலுவலர் ரமேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தரமான விதைகளை விதைப்பதன் மூலம், அதிக மகசூல் பெற முடியும். விதை பரிசோதனை நிலையத்தில் புறத்துாய்மை, ஈரப்பதம், முளைப்பு திறன், பிற ரக கலப்பு என, நான்கு விதமான பரி-சோதனை செய்யப்படுகிறது.
விதைகளை சோதனைக்கு அனுப்பும்போது, நெல், 50 கிராம், உளுந்து, பாசிப்பயறு, 100 கிராம், மக்காச்சோளம், நிலக்கடலை, 500 கிராம், எள், ராகி, 25 கிராம், காய்கறி பயிர்கள் கத்தரி, தக்காளி, மிளகாய், 100 கிராம், சுரை, பரங்கி, 100 கிராம், பாகல், புடலை, 250 கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும். விதை பரிசோதனை கட்டணமாக, 80 ரூபாய் செலுத்த வேண்டும்.ஆய்வு செய்ய வேண்டிய, விதையை கட்டணத்-துடன் நேரில் அல்லது தபால் மூலம், மூத்த வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், முதல் குறுக்கு தெரு, தின்னப்பா நகர், காந்தி கிராமம், கரூர்-4 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
