ADDED : செப் 22, 2026 03:36 AM
கரூர்; கரூர் மாவட்ட விவசாயிகள், விதையின் ஈரப்-பதம் அறிந்து சேமிக்க வேண்டும் என, கரூர் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்திய குறைந்தபட்ச விதை அளவீடு பரிந்து-ரைத்த அளவில், விதையின் ஈரப்பதம் அறிந்து சேமிக்க வேண்டும். விதை அதிக முளைப்பு திற-னுடன் இருக்கவும், உரிய காலம் வரை சேமிக்-கவும் நெல், 13 சதவீதம், சோயாபீன்ஸ், சிறுதா-னியங்கள், பப்பாளி, 12 சதவீதம், பயறு வகைகள், நிலக்கடலை, சூர்யகாந்தி, எள், கொத்தவரை, பீட்ருட், பாலக்கீரை, 9 சதவீதம், முருங்கை, புளிச்சை, வெங்காயம், கத்தரி, மிளகாய், தக்காளி 8 சதவீதம், காலிபிளவர், முட்டைகோஸ், நுால்கோல், சுரை, பாகல், புடல், பீர்க்கு, பூசணி, பரங்கி, தர்ப்பூசணி, வெள்ளரி ஆகியவை, 7 சத-வீதம் ஈரப்பதம் இருக்குமாறு சேமிக்க வேண்டும்.எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை, விதை மாதிரி ஒன்றுக்கு, 80 ரூபாய் செலுத்தி கரூர் காந்திகிராமம் தின்னப்பா நகரில் உள்ள, விதை பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம். விதை பரி-சோதனை வாய்ப்பை, கரூர் மாவட்ட விவசா-யிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, செய்திக்
குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
