/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை சரிவு கரூர் மாவட்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சி
/
உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை சரிவு கரூர் மாவட்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சி
உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை சரிவு கரூர் மாவட்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சி
உற்பத்தி அதிகரிப்பால் வெற்றிலை விலை சரிவு கரூர் மாவட்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சி
ADDED : டிச 17, 2024 07:30 AM
கரூர்: வெற்றிலை உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், மார்கழி மாத துவக்கத்திலேயே வெற்றிலை விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், லாலாப்பேட்டை, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, கருப்பத்துார், வதியம், மணத்தட்டை, குளித்தலை, மரு துார், புகழூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில், காவிரி பாசனத்தை நம்பி வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது.
நடப்பாண்டு, வெற்றிலை சாகுபடி எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது.கார்த்திகை மாத துவக்கத்தில் இருந்து, கரூர் மாவட்டத்தில் கடும் பனி பொழிவு நிலவுகிறது. இருப்பினும், வெற்றிலை உற்பத்தி
அதிகரித்துள்ளது. நேற்று மார்கழி மாதம் தொடங்கியதால், அடுத்த ஒரு மாத காலம் முகூர்த்த நாள் இல்லாத காரணத்தால்,
வெற்றிலை விலை சரிந்துள்ளது.இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புகளூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது:காவிரியாற்றில் தண்ணீர் செல்வதால், நடப்பாண்டு தண்ணீர் தட்டுப்பாடு இல்லை. இதனால், வெற்றிலை உற்பத்தி
அதிகரித்துள்ளது. மேலும், வெற்றிலைக்கு கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், இருந்த விலை தற்போது இல்லை.மார்கழி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுபவிசேஷங்கள் இல்லாததால், சராசரியாக, 104 கவுளி கொண்ட, ஒரு சுமைக்கு, 750
ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை விலையும் குறைந்து விட்டது. குறிப்பாக, வெற்றிலை இளம்பயிர், 6,000 ரூபாயில் இருந்து, 5,000
ரூபாயாகவும், கற்பூர வெற்றிலை இளம்பயிர், 4,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயகவும் குறைந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.