/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்படம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
/
பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்படம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்படம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்படம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
ADDED : ஜூலை 04, 2025 01:39 AM
குளித்தலை, பாசன வாய்க்காலில், கழிவுநீர் கலப்பதை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை அடுத்த, மாயனுார் காவிரி ஆறு கதவணையிலிருந்து, கிளை பாசன வாய்க்கால் திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் வழியாக செல்கிறது. இதன் மூலம் அப்பகுதியில், 500 ஏக்கருக்கு மேல் நெல், வாழை, வெற்றிலை சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில், பாசன வாய்க்காலில் கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. வாய்க்கால் முழுவதும் சாக்கடை நீரே நிரம்பி வருவதால், பாசனத்திற்காக அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
மேலும் கழிவுநீர், விளைநிலங்களிலும் புகுந்து வருவதால் சாகுபடியும் பாதிக்கப்படுகிறது. விவசாய பணியில் ஈடுபடும் விவசாயிகள், கூலி தொழிலாளிகள் தோல் நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து பலமுறை, டவுன் பஞ்., நிர்வாகத்திடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று மதியம், 12:00 மணியளவில் கிருஷ்ணராயபுரம் பஞ்சப்பட்டி நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசையும், டவுன் பஞ்., நிர்வாகத்தையும் கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் கழிவுகள், மரக்கிளைகள் வராத வகையில் விவசாயிகள் வாய்க்காலை அடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் மற்றும் டவுன் பஞ்., அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீர் கலக்காமல் இருப்பது, பாசன வாய்க்காலை துார்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக, விவ
சாயிகளுக்கு உறுதி அளித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.